Latestமலேசியா

ஜோகூர் பாருவில் சூராவ் அருகே கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு, ஏப்ரல்-14-ஜோகூர், ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டியில் ஒரு சூராவுக்கு அருகில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 7.30 மணியளவில் குழந்தை அழும் சத்தத்தை கேட்ட போது மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடம் விரைந்த போலீஸார், ஒரு பச்சை நிற துண்டால் சுற்றப்பட்ட நிலையில், இன்னும் தொப்புள் கொடி அறுக்கப்படாத அந்த குழந்தையை கண்டுபிடித்தனர்.

குழந்தை உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

தற்போது குழந்தையின் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!