Latestஉலகம்

பாரிஸில் கத்திக்குத்து தாக்குதல்: 3 பெண்கள் காயம்; சந்தேக ஆடவன் கைது

பிரான்ஸ், ஜூலை 28 – பாரிஸில், இரண்டு கத்திகளுடன் வந்த நபர் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களைக் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பணியில் இல்லாத காவல் அதிகாரி ஆகிய அனைவரும் இணைந்து குற்றவாளியை மடக்கிப் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது, “எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டார்” என்று அவர் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை. இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து பிரான்ஸ் தேசிய பயங்கரவாத வழக்குரைஞர் அலுவலகம் பரிசீலித்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!