Latestமலேசியா

பினாங்கில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாதசாரி: கால் எலும்பு முறிந்தது

ஜார்ஜ்டவுன், அக்-09-பினாங்கு, Lebuh Chulia பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 32 வயது பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு கால் எலும்பு முறிந்தது.

அவ்விபத்து அக்டோபர் 5-ஆம் தேதி இரவு சுமார் 9.10 மணியளவில் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது 22 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது பணியிடத்திலிருந்து Jalan Patani ஜாலான் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வடகிழக்கு மாவட்டக் காவல்துறை துணைத் தலைவர் Lee Swee Sake தெரிவித்தார்.

அவ்விபத்து தொடர்பான 46 விநாடி காணொளி வியாழக்கிழமை வாட்ஸ்அப்பில் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காணொளியில், மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி தூக்கி வீசப்படும் காட்சி இடம்பெற்றிருந்ததாக அவர் கூறினார்.

விபத்தில் காயமடைந்தவருக்கு பொதுமக்கள் உதவிய நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!