Latestமலேசியா

புக்கிட் அமான் CID இயக்குநர் எம். குமாருக்கு ‘டத்தோ வீரா’; MDA தலைமை நிர்வாகி முரளிதரனுக்கு ‘டத்தோ’ பட்டம்

மலாக்கா, ஆகஸ்ட் 25 -மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாமின் 77-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில விருது வழங்கும் விழாவில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் உயரிய மாநில விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ‘டத்தோ வீரா’ பட்டத்தை வழங்கும் Darjah Cemerlang Seri Melaka விருது வழங்கப்பட்டது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் குமார் பெற்றுள்ளார். அவருக்கு அரச மலேசியப் போலீஸ் படையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் மருத்துவ சாதன ஆணையமான MDA-வின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முரளிதரன் பரமசுவாவுக்கும் மாநில விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவருக்கு ‘டத்தோ’ பட்டத்தை வழங்கும் Darjah Pangkuan Seri Melaka (D.P.S.M.) விருது வழங்கப்பட்டது.

மாநில விருது வழங்கும் விழா ஆயர் குரோவில் உள்ள ஸ்ரீ நெகிரி மண்டபத்தில் நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!