Latestமலேசியா

புதிய எரிபொருள் விலை; RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலை குறைகிறது

புத்ராஜெயா, மே-28-​RON 97 பெட்ரோல், மானியமில்லாத RON 95 மற்றும் தீபகற்ப மலேசியாவுக்கான டீசல் விலைகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இப்புதிய விலை ஜூன் 3-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.

​அதன்படி, RON 97 பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு 4 ரிங்கிட் 65 காசுகளாக விற்பனை செய்யப்படும்.

மானியமில்லாத RON 95 பெட்ரோல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு, லிட்டருக்கு 3 ரிங்கிட் 92 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு 4 ரிங்கிட் 87 காசுகளாக விற்கப்படும்.

​இருப்பினும், BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான RON 95 பெட்ரோல் ஒரு ரிங்கிட் 99 சென்னாகவும், கிழக்கு மலேசியாவில் டீசல் விலை 2 ரிங்கிட் 15 காசுகளாகவும் எவ்வித மாற்றமுமின்றி தொடரும்.

​உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் Brend கச்சா எண்ணெய் விலை இன்னும் தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதால், பொது மக்கள் தங்களின் பயணங்களை முறையாக திட்டமிட்டு தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டை தவிர்க்குமாறு நிதி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!