Latestமலேசியா

போதைப் பொருள் விநியோகம் ; மூவர் தூக்கு தண்டனையை  எதிர்நோக்கியுள்ளனர் 

ஈப்போ, அக்  14 – கஞ்சா போதைப் பொருளை  விநியோகித்த குற்றத்திற்காக, இரு அந்நிய நாட்டவர்கள் உட்பட  மூவர் மீது, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்திய நாட்டைச்  சேர்ந்த  42 வயது நாராயனன் லோகநாதன்,   இந்தோனேசியப் பெண்ணான  21 வயது  புத்ரி அடெலியா  ( Puteri Adelia ),  உள்நாட்டவரான  26 வயது  எம்.ஹேமமாலினி ஆகியோர்  குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

நாரயணன் , 62 ,000 கிராம்  கஞ்சாவை  விநியோகித்தததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Puteri Adelia-வும், ஹேமமாலினியும், இன்னும் கைது செய்யப்படாத  மேலும் ஒரு நபருடன் சேர்ந்து 161 கிராம் எடையிலான  Yaba  வகை  போதை மருந்துகளை  விநியோகித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அந்த மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்  சாகும் வரை  கட்டாய தூக்கு தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!