
கோலாலம்பூர், ஜூன் 22 – ரயிலுக்குள் இரு ஆண்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் காணொளியில், இருவரும் பொதுப் போக்குவரத்து விதிமுறைகளையும் பயணிகளின் நலனையும் பொருட்படுத்தாமல் செயல்படுவது தெரிகிறது.
அவர்களின் செயல் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தையும் பாதுகாப்பு அச்சத்தையும் ஏற்படுத்தியதாக சமூக வலைத்தள பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காணொளி வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே சமயத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைவரும் ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



