Latestமலேசியா

வட சுமத்ராவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம்; பினாங்கின் மூன்று மாவட்டங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-16-இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பினாங்கிலும் உணரப்பட்டன.

நேற்று மாலை 6.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பினாங்கின் சில பகுதிகளில் கட்டடங்களில் இருந்தவர்கள் அதிர்வுகளை உணர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட சுமத்ராவில் ஏற்பட்ட அந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் பலியாயினர்.

அந்த நிலநடுக்கத்தின் தாக்கமே தீபகற்ப மலேசியாவின் வடப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இரவு 7.23 மற்றும் 7.27 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நில அதிர்வு குறித்த புகார்கள் பெறப்பட்டன.

Barat Daya, Timur Laut மற்றும் Seberang Perai மாவட்டங்களை அவை உட்படுத்தியிருந்தன.

இதையடுத்து, நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணிக்க ஏதுவாக தீயணைப்பு – மீட்புப் படையினர் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

எனினும் எந்த அசம்பாவிதமும் பதிவுச் செய்யப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!