Latestமலேசியா

வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் பிரதமர் அன்வார்; சமூக ஊடகத்தில் மகிழ்ச்சிப் பதிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட்-13-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இது குறித்து தமது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடவுள் கிருபையால், மீண்டும் வீடு திரும்பினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

​முன்னதாக, அவருக்கு ‘Para-umbilical hernia’ எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்காக லேப்ரோஸ்கோபி (Laparoscopic) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிரதமரின் மருத்துவக் குழு தலைவர் Dr Asri Ranga Abdullah Ramaiah, இந்த சிகிச்சை முறை சிறப்பு மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் எவ்வித சிக்கலுமின்றி சுமூகமாக நடந்து முடிந்ததாக உறுதிப்படுத்தினார்.

இவ்வேளையில், பிரதமரின் உடல்நலனுக்காகவும் விரைந்து குணமடையவும் பிரார்த்தனை செய்த அனைத்து மலேசியர்களுக்கும் அன்வார் சார்பில் அவரது மனைவி டத்தோ ஸ்ரீ Dr வான் அஸிசா வான் இஸ்மாயில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!