Latestஇந்தியாஉலகம்

வைரஸ் மூளை அழற்சி நோய்ப் பரவலைக் கையாள இந்தியா நிபுணர்களை அனுப்பியுள்ளது

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் Encephalitis எனும் வைரஸ் மூளை அழற்சி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்நோய்ப் பரவல் காரணமாகப் பல குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Chandipura வைரஸ் தொடக்கத்தில் லேசான காய்ச்சலை ஏற்படுத்தி தீவிர மூளை அழற்சி நோய்க்குறியான AESசை ஏற்படுத்துகிறது. AESசுக்கு Encephalitisயும் ஒரு காரணமாக இருக்கிறது. அவற்றின் முழுமையான தன்மையை தொற்றுநோயியல், நச்சுயிரியல், பூச்சியியல் மற்றும் கால்நடை அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழு கண்டறியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பருவமழைக் காணப்படும் நிலையில், குஜராத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேருக்கு Chandipura வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் மேற்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில், Chandipura வைரஸ் அவ்வப்போது AESசை ஏற்படுத்துகிறது. மணல் ஈக்கள், கொசுக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் இது பரவுகிறது.

2024-ஆம் ஆண்டில் ஜூன் மாதத் தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாத நடுப் பகுதி வரை இந்தியாவில் 245 AES பாதிப்புகள் பதிவாகின. அவற்றில் 82 உயிரிழப்புகளும் அடங்கும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!