
ஷா ஆலம், ஆகஸ்ட் 14 – ஷா ஆலம் படாங் ஜாவா, ஜாலான் குன்சி ஆயெரிலுள்ள (Jalan Kunci Air, Padang Jawa) மின்சார கேபிள் சேமிப்பு கிடங்கு நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 விழுக்காடு எரிந்து சேதமடைந்தது.
இரவு, தீ விபத்து தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஷா ஆலம், கிள்ளான் செலாத்தான் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 21 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீ விபத்தில் சுமார் 80 விழுக்காடு கட்டிடம் சேதமடைந்த நிலையில், உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.



