
கிள்ளான், ஜூன்-28-பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, கிள்ளானில் புதிய Shah Alam LRT பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷா உள்ளிட்டடோர் இதில் கலந்துகொண்டார்.
Seri Andalas நிலையத்திலிருந்து Johan Setia வரை பிரதமரும் பிரமுகர்களும் முதல் இரயிலில் பயணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனைக் கொண்டாடும் வகையில், நாளை ஜூன் 29 முதல் ஜூலை 31 வரை, 30 நாட்களுக்குப் பயணிகள் இந்த LRT மற்றும் அதன் இணைப்புப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.
37.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் புதிய தடம், Bandar Utama முதல் Johan Setia வரை 20 நிலையங்களை இணைக்கிறது.
Bandar Utama மற்றும் Glenmarie 2 ஆகிய முக்கிய நிலையங்கள் வழி மற்ற இரயில் சேவைகளுக்கும் பயணிகள் எளிதாக மாற முடியும்.
இதன் மூலம் பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் பகுதிகளைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பெரும் பயனடைவார்கள்.
பயணிகளின் வசதிக்காக 13 பிரதான இணைப்புப் பேருந்து வழித்தடங்களும், 20 Rapid KL On-Demand மண்டலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இது, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை 40 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற நாட்டின் இலக்கிற்குப் பெரும் வலு சேர்க்கிறது.
கூடுதல் விவரங்கள் மற்றும் பயண நேரங்களை அறிய, myrapid.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தை நாடுங்கள்.



