Latestமலேசியா

ஹாஜி பண்டிகை: லெம்பா கிள்ளான் பகுதியிலிருந்து தினமும் 33 லட்சம் வாகனங்கள் வெளியேறும் என LLM கணிப்பு

கோலாலம்பூர், மே-26 – ஹாஜி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக, லெம்பா கிள்ளான் பகுதியில் இருந்து தினமும் சுமார் 33 லட்சம் வாகனங்கள் வெளியேறும் என மலேசிய நெடுஞ்சாலை ஆணையமான LLM தெரிவித்துள்ளது.

22 மே முதல் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து வருவதாகவும், மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் தொடங்கியதால் பல “ஹாட்ஸ்பாட்” பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுங்கை பூலோ, ராவாங், தாப்பா, கோப்பேங் மற்றும் ஜூரு–சுங்கை டூவா (Sungai Buloh–Rawang–Bukit Beruntung, Sungkai–Bidor–Tapah–Gopeng, Plaza Tol Juru–Seberang Jaya–Sungai Dua) உள்ளிட்ட வடக்கு நோக்கிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலை பகுதிகளில் போக்குவரத்து மெதுவாக உள்ளது. அதேபோல், சிரம்பான், செனாவாங், ஆயர் கெரோ மற்றும் ஸ்கூடாய் (Seremban, Senawang, Ayer Keroh, Skudai) உள்ளிட்ட தெற்கு பாதைகளிலும் வாகன நெரிசல் காணப்படுகிறது.

இதேவேளை, கோம்பாக் முதல் பெந்தோங் வரை உள்ள கோலாலம்பூர்–காராக் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Karak Highway) மற்றும் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (East Coast Expressway, LPT2)யிலும் அதிக நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்தை சீர்செய்ய சில முக்கிய இடங்களில் ஸ்மார்ட்லேன் (SmartLane) நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவும் LLM அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!