
புத்ராஜெயா, ஜூலை-5-நாட்டின் கல்வித்துறையில் புதிய மாற்றமாக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள ‘4-ஆம் ஆண்டு கற்றல் மெட்ரிக்ஸ் மதிப்பீட்டுத்’ தேர்வில், நாடு முழுவதும் சுமார் 400,000 நான்காமாண்டு மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
4 அடிப்படைப் பாடங்களான மலாய் மொழி, ஆங்கில மொழி, கணிதம், அறிவியல் ஆகியவற்றை இந்த மதிப்பீட்டு உள்ளடக்கியிருக்கும்.
இதுவே தாய்மொழிப் பள்ளிகளில், மாண்டரின் அல்லது தமிழ் மொழிப் பாடமும் இதில் சேர்க்கப்படும் என, தேர்வு வாரியத்தின் இயக்குநர் Ab Aziz Mamat தெரிவித்தார்.
ஒவ்வொரு பாடமும் 1 மணி 15 நிமிடங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சோதிக்கப்படும்.
சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்குக், விடையளிக்கக் கூடுதலாக 30-திலிருந்து 60 நிமிடங்கள் வரை வழங்கப்படும்.
இந்த மதிப்பீட்டில் அமர அனைத்து நான்காமாண்டு மாணவர்களுக்கும் பதிவுச் செய்யப்படுவதை பள்ளிகள் உறுதிச் செய்ய வேண்டுமென, Aziz மேலும் கூறினார்.
மாணவர்களின் கற்றல் திறனை முறைப்படுத்தவும், அடிப்படைப் பாடங்களில் அவர்களின் புரிதலை வலுப்படுத்தவும் இந்த மெட்ரிக்ஸ் மதிப்பீடு இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது வெறும் தேர்வு மட்டுமல்ல, அடுத்தகட்டக் கல்விக்குத் தேவையான அடித்தளத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகக் கல்வி அமைச்சு கருதுகிறது.



