Latestமலேசியா

இந்தோனேசியாவுக்குப் போதைப் பொருள் கடத்த முயன்ற தம்பதியர் கைது – 16 கிலோ syabu போதைப் பொருள் பறிமுதல்

கோல லங்காட், ஆகஸ்ட் 5 – மோரிப் கடல் வழியாக இந்தோனேசியாவுக்கு ஏறக்குறைய 16 கிலோ எடையுடைய போதைப் பொருளைக் கடத்தும் முயற்சியை மலேசிய கடல் அமுலாக்க ரோந்து அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சீனத் தேயிலை பாக்கெட்டுக்களில் அடைத்து இந்தோனேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த அந்த ஷாபு (syabu) வகைப் போதைப் பொருளைக் கைப்பற்றிய அதிகாரிகள், இதன் தொடர்பில் தம்பதியர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் பொட்டலங்களை வேனில் இருந்து இந்தோனேசியாவுக்குப் புறப்படத் தயாராக இருந்த படகிற்கு மாற்றிக் கொண்டிருந்த போது அந்த 46 வயது ஆடவரையும் 44 வயது பெண்ணையும் அதிகாரிகள் கைது செய்ததாக சிலாங்கூர் கடல் ரோந்து போலீஸ் பிரிவு இயக்குனர் தெரிவித்தார். அப்போதைப் பொருளின் மதிப்பு 6 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் கடல் ரோந்துப் போலீஸ் தலைமையகம் கொண்டு செல்லப்பட்டுள்ள அத்தம்பதியர் பின்னர் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!