
கோலாலம்பூர், அக்டோபர்-11 – 2027 பட்ஜெட்டில், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 858 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டை விட 11.82 விழுக்காடு அதிகமாகும்.
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதே நாட்டின் நீண்டகால இலக்கு எனக் கூறி, ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் இதனை வரவேற்றுள்ளார்.
இதன் மூலம், ருக்குன் தெத்தாங்கா தொண்டூழியப் படைக்கான வருடாந்திர மானியம் 6,000-லிருந்து 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டு, 78.3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘Kembara Negara Bangsa’ திட்டத்திற்கு 48 மில்லியன் ரிங்கிட்டும், தேசிய ஜவுளி அருங்காட்சியகத்தை மாற்றியமைத்தல் மற்றும் வரலாற்றுத் தளங்களை மேம்படுத்துவதற்கு 90 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட நிதியும் வழங்கப்படவுள்ளது.
தவிர, வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாலர் பள்ளிகளில் நவீன கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமையான, மலேசியா மடானி சமுதாயத்தை உருவாக்குவதே இதன் தலையாய நோக்கம் டத்தோ ஏரன் அறிக்கையில் கூறினார்.



