Latestமலேசியா

கெடாவில் மூன்று நாட்களாகக் காணாமல் போன மலையேறி மீட்கப்பட்டார்

கெடா, ஜூலை-1-கெடா, Gunung Jeraiயில் மலையேறச் சென்ற போது மூன்று நாட்களாகக் காணாமல் போன ஆடவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

Padang Tok Sheikhக்கில் பள்ளத்தில் தவறி விழுந்த அவர், உதவி கேட்டு உரகக் கத்தியதைக் கேட்ட மேலும் மூன்று மலையேறிகள் தீயணைப்பு, மீட்புத் துறையினரின் உதவியை நாடி அவரை மீட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணாமல் போன அந்த மலையேறி தன்னந்தனியாக அத்துணிகரப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது, பள்ளத்திற்குள் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

நேற்றிரவு தகவல் கிடைத்து, அங்கு விரைந்து சென்று அந்த மலையேறியை மீட்டதாக மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் செயல் நடவடிக்கைக் குழு தெரிவித்தது.

பள்ளத்தில் தவறி விழுந்து அனைத்து உடைமைகளையும் இழந்ததால், தம்மால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

34 வயதான அம்மலையேறிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவரது நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!