Latestமலேசியா

திரங்கானு சோகம்: ஆற்றில் காணாமல் போன இரு சகோதரிகள் நீரில் மூழ்கி பலி

குவாலா திரங்கானு, மே-12-திரங்கானுவில் Sungai Jeram Hulu ஆற்றில் குளிக்கும்போது காணாமல் போன இரண்டு இளம் சகோதரிகள், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கம்போங் ஜெராமைச் சேர்ந்த 15 மற்றும் 12 வயதுடைய அந்தச் சிறுமிகள், நேற்று மதியம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்குப் பிறகு, மாலை 6 மணியளவில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

சிறுமிகளின் உடல்கள் ஆற்றின் அடிவாரத்தில் சுமார் 4 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டதாக, திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

பலத்த நீரோட்டம் காரணமாக மீட்புப் பணி சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

சிறுமிகள் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவிலேயே உடல்கள் மீட்கப்பட்டன.

சவப் பரிசோதனைக்காக சடலங்கள் சுல்தான் ஜைனால் அபிடின் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!