Latestமலேசியா

கிள்ளானில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நபர் இதய நோயால் உயிரிழப்பு

கிள்ளான், மே-12-கிள்ளான், தாமான் செந்தோசாவில் கால்வாயில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், இதய நோயால் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் வாக்கில் பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.

அங்கு வந்த மருத்துவ குழு, சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.

தொடக்கக் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 50 வயதிலான Air Selangor நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளி என்றும், அருகில் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

சவப்பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இதய இரத்த நாள அடைப்பு காரணமாக ஏற்பட்ட இதய நோயே மரணத்திற்குக் காரணம் என போலீஸார் கூறினர்.

இதையடுத்து இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!