Latestமலேசியா

பாஸ் – பெர்சாத்து மோதலில் தீர்ப்பளிக்கும் சக்தியாக MIPP!

பெரிக்காத்தான் நேஷனலில் PAS – BERSATU இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் “தீர்ப்பளிக்கும்” சக்தியாக MIPP உருவெடுத்துள்ளது.

தற்போது பெரிக்காத்தான் நேஷனலின் உச்சமன்றத்தில் MIPP-க்கு ஐந்து முக்கிய பதவிகள் உள்ளன.

MIPP தலைவர் புனிதன் பெரிக்காதான் நேஷனல் துணைத் தலைவராகவும், MIPP துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் பெரிக்காதான் நேஷனல் பொருளாளராகவும், டத்தோ சிவக்குமார் பெரிக்காதான் நேஷனல் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ளனர்.

இதனுடன், MIPP-க்கு இரண்டு உச்சமன்ற உறுப்பினர் பதவிகளும் உள்ளன.

இதன் மூலம், பெரிக்காதான் நேஷனலின் எதிர்காலம் தொடர்பான எந்த முக்கிய முடிவிலும் MIPP-க்கு ஐந்து வாக்குகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இது பெர்சத்து மற்றும் GERAKAN கட்சிகளை விட அதிக செல்வாக்காகக் கருதப்படுகிறது.

அண்மையில் PAS, MIPP-இன் ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில், MIPP துணைத் தலைவரான எஸ். சுப்ரமணியத்தை பெரிக்காதான் நேஷனல் பொருளாளராக நியமித்ததாகவும் அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், PAS அல்லது BERSATU யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து MIPP இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. கட்சியின் தலைவர் புனிதன் கூறுகையில், தற்போதைய அரசியல் முன்னேற்றங்களை MIPP உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், கட்சியின் நிலைப்பாடு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

PAS – BERSATU உறவு முறிவின் விளிம்பில் இருக்கும் வேளையில், பெரிக்காதான் நேஷனலின் அரசியல் கணக்கை மாற்றக்கூடிய முக்கிய சக்தியாக MIPP பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!