Latestஇந்தியா

மகனின் iPhone ஆசையால் விபரீதம்; தற்கொலை மிரட்டல் விடுத்த மகனை காப்பாற்ற முயன்ற பெற்றோர் உட்பட 3 பேர் பலி

மும்பை, ஆகஸ்ட்-22-இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் iPhone கேட்டு அடம் பிடித்த மகனைக் காப்பாற்ற முயன்ற பெற்றோர் உட்பட மூவர் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

​18 வயது குணால், தந்தை முரளிதரிடம் புதிதாக iPhone வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக தந்தை மறுக்கவே, ஆத்திரமடைந்த குணால் மலை உச்சிக்குச் சென்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

​சுமார் 3 மணி நேரமாக பெற்றோர், கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால், குணால் பாறை விளிம்பில் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே இருந்தார்.

​பிற்பகல் 1 மணியளவில், மகனை நெருங்கி சமாதானப்படுத்த தந்தை முயன்றபோது, குணால் திடீரென கீழே குதித்தார்.

அவரைப் பிடிக்க முயன்ற தந்தையும் நிலைதடுமாறி மகனுடன் சேர்ந்து பள்ளத்தில் விழுந்தார்.

கணவனும் மகனும் கண்முன்னே கீழே விழுந்த அதிர்ச்சியில் உறைந்த தாய் சங்கீதாவும், சில நொடிகளிலேயே அதே மலையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

​சில நிமிட இடைவெளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீஸார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!