Latestமலேசியா

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான மானியம் தொடர்பான புதியக் கட்டுப்பாடு முட்டாள்தனமானது, நியாயமற்றது, அபத்தமானது; சரவணன் கடும் தாக்கு

கோலாலம்பூர், நவம்பர்-27 – முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான மானியம் தொடர்பான புதியக் கட்டுப்பாடு முட்டாள்தனமானது; நியாயமற்றது மற்றும் அபத்தனமானது!

ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவ்வாறு கடுமையாகச் சாடியுள்ளார்.

தாங்கள் எதிர்நோக்கும் சமூகப் பொருளாதார சவால்களை தீர்ப்பதில் மத்திய அரசாங்கம் தோல்விக் கண்டிருப்பதாக இந்தியர்கள் ஏற்கனவே கடும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

இந்த லட்சணத்தில், மானிய வழங்கல் தொடர்பான புதியக் கட்டுப்பாடுகள், அரசாங்கம் மீதான அவர்களின் கொஞ்ச நஞ்ச ஆதரவையும் அரித்து விடுமென அவர் சொன்னார்.

இந்தியர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ண வேண்டாம்; இந்நாட்டின் மேம்பாட்டுக்கும் நலனுக்கும் அரும்பாடுப்பட்டவர்கள் அவர்கள்.

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை இப்படி அவமதிக்காதீர்கள்; நியாயமாகவும் பொறுப்போடும் நடந்துகொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.

பெரும்பாலான இந்து ஆலயங்கள் நிதிச் சிக்கலை எதிர்நோக்கியுள்ளன.

அவற்றைப் பழுதுப் பார்க்கவும், பராமரிக்கவும், ஆபத்து அவசர பணிகளை மேற்கொள்ளவும் போதுமான நிதித் தேவைப்படுகிறது.

அவர்களைப் போல் மூன்றாண்டுகள் காத்திருக்கச் சொன்னால் எப்படி என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கேட்டார்.

ஒருவேளை நிதி முறைகேடு நடந்து விடுமோ என்பது தான் அரசாங்கத்தின் கவலையாக இருந்தால், அவர்கள் நிதியை வழங்குவதற்கு முன் மதிப்பீடு செய்ய மதிப்பீடு மற்றும் கண்காணிப்புக் குழுவை அனுப்பலாம்.

எனவே, வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சு மேற்கண்ட உத்தேச சட்டத் திருத்தத்தை இதோடு நிறுத்திக் கொள்வதே சரி என சரவணன் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

மானியம் கிடைத்த முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத்தலங்களுக்கு, புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மூன்றாண்டுகள் தடை விதிக்கும் அரசாங்கத்தின் உத்தேசப் பரிந்துரை, மக்கள் மத்தியால் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!