
மூவார், ஜூன்-19 – தனது 12 மற்றும் 9 வயதுடைய இரு பேத்திகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 67 வயது வயோதியகனுக்கு, மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 14 பிரம்படி விதித்துள்ளது.
கடந்த ஆண்டு பத்து பஹாட்டிலுள்ள (Batu Pahat) வீட்டில் இந்தக் குற்றங்களை தாம் புரிந்ததாக அக்குற்றவாளி நீதிபதியின் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளான்.
இதையடுத்து, நீதிபதி தண்டனையை அறிவித்ததுடன், சிறைவாசத்தின்போது ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்கவும், விடுதலையான பின்னர் மூன்று ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் எந்த சட்டத்தரணியாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



