Latestஉலகம்மலேசியா

லாஹாட் டத்துவில் “ஸ்னோர்கலிங்” செய்தபோது 78 வயது ஜெர்மனி ஆடவர் மாரடைப்பால் மரணம்

லாஹாட் டத்து, ஜூன்-18-சபா, லாஹாட் டத்து (Lahad Datu) கடற்பகுதியில் உள்ள தீவு ஒன்றில், _snorkelling_ எனப்படும் கடலடி நீச்சல் பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நேற்று காலை Pulau Sakar கடற்பகுதியில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்ததாக மலேசிய கடல்சார் அமுலாக்க நிறுவனமான MMEA கூறியது.

78 வயதான Kenneth Ray Crouse என்ற அந்தப் பயணி தண்ணீரில் மயங்கியதைத் தொடர்ந்து, அவருடன் இருந்த நண்பர் முதலுதவியாக CPR சிகிச்சையை அளித்துள்ளார்.

​காலை 11.20 மணியளவில் அவசரத் தகவல் கிடைத்ததும், கடல்சார் மீட்புக் குழுவினர் ரோந்துப் படகு மூலம் விரைந்து சென்று அவரை மீட்டு லாஹாட் டத்து பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

​கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பொது மக்கள் தங்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முதலிடம் வழங்க வேண்டும் என MMEA அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!