Latestமலேசியா

வெளிநாட்டு பிரஜையிடம் 269,000 ரிங்கிட் திருட்டில் சந்தேகப்படும் 5 போலீஸ்காரர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே வேறு துறைகளுக்கு மாற்றம்

கோலாலம்பூர், ஏப் 27 – வெளிநாட்டு தொழிலாளரிடம் 260,000 ரிங்கிட் கொள்ளையிட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு போலீஸ்காரர்களில் ஐவர் அலுவலகத்திற்குள் துறைகளுக்கிடையே வேலை மாற்றப்பட்டனர். விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து அரசாங்க துணை வழக்கறிரின் முடிவுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Rusdi Mohd Isa தெரிவித்தார். அந்த போலீஸ்காரர்கள் இன்னமும் கடமையில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பரபரப்பான பணியில் இடம்பெற்றிருக்கவில்லை. அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞரின் முடிவுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.

கைதான சந்தேகப் பேர்வழிகளில் சிலர் சாட்சியாகவும் மற்றும் தலைமறைவாக இருந்துவரும் மற்றொரு சந்தேக நபரை கண்டறிவதற்கு உதவும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக டத்தோ Rusdi Mohd Isa தெரிவித்தார். இம்மாதம் 7 ஆம் தேதி Jalan Tun Razak கில் வீடு ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஆடவரிடம் 260,000 ரிங்கிட் கொள்ளையிட்டதன் தொடர்பில் ஐந்து போலீஸ்காரர்கள் உட்பட ஏழு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!