கோலாலம்பூர், மே-15, சுடும் ஆயுதங்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவனுடன் தொடர்பிருப்பதன் சந்தேகத்தில் கைதான 3 வெளிநாட்டு ஆடவர்களும் தத்தம் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர்.
அவர்கள் மீதான விசாரணை நிறைவுப் பெற்றதை அடுத்து அம்மூவரும் திருப்பி அனுப்பப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
அம்மூவரும் முறையே அமெரிக்கா, துருக்கியே, ஜியோர்ஜியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அம்மூவரும் இதர 7 உள்நாட்டினரும் மே 10-ஆம் தேதி போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
உள்நாட்டைச் சேர்ந்த அந்த 7 பேரும் விசாரணைக்குத் தேவைப்பட்டால் மீண்டும் கைதாகலாம் என்றும் Datuk Rusdi சொன்னார்.
அச்சம்பவம் தொடர்பில் Shalom எனும் அந்த இஸ்ரேலிய ஆடவனும் , அவனுக்கு சுடும் ஆயுதங்களை விற்ற உள்ளூர் தம்பதியும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.