Latestமலேசியா

ஈரான் -இஸ்ரேல் நெருக்கடிக்கு அமைதி தீர்வு தேவை இந்தியா வலியுறுத்து

புதுடில்லி, அக் 16 – ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமிடையே நெருக்கடி குறித்து கவலை தெரிவித்த இந்தியா அவ்விரு நாடுகளும் அமைதியான முறையில் தங்களுக்கிடையிலான் பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்ந்தால் உலகம் முழுவதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் S. Jaishankar தெரிவித்திருக்கிறார்.

உலகக் பொருளாதாரத்திற்கு முக்கிய வட்டாரமாக மத்திய கிழக்கு வட்டாரம் திகழ்வதால் இப்போதைய நிலைமையை மேலும் மோசம் அடையும் சூழ்நிலையை தவிர்க்கும்படி ஈரான் மற்றும் இஸ்ரேலை தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார். மத்திய கிழகக்கு வட்டாரத்தில் ஒரு கோடி இந்திய பிரஜைகள் வாழ்ந்து வருகின்றனர். இது தவிர அந்த வட்டாரம் இந்தியாவிற்கான முக்கிய கப்பல் போக்குவரத்து மார்க்கமாகவும் திகழ்வதால் மோதல் மோசமடைவதை தவிர்க்கும்படி ஈரான் வெளியுற அமைச்சர் Amir Abdollahian மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் Israel Katz சிடம் தாம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக JaiSankar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!