Latestமலேசியா

ஒப்பந்த முறையிலான 6,034 புதிய ஆசிரியர்கள் நாடு முழுவதும் பணியைத் தொடங்கினர்

கோலாலம்பூர், ஏப்ரல்-17, பள்ளிகளில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு கண்டு வரும் கல்வி அமைச்சு, திங்கட்கிழமை மட்டும் 6,034 புதிய ஆசிரியர்களை ஒப்பந்த முறையில் வேலைக்கு எடுத்துள்ளது.

அவர்களில் 1,858 பேர் இடைநிலைப் பள்ளிகளிலும், 4,176 பேர் ஆரம்பப் பள்ளிகளிலும் பணியமர்த்தப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் KPM கூறியது.

ஒப்பந்த முறையிலான அப்புதியப் பணியமர்வு 3 அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு விளக்கியது.

சேவைக்கானத் தேவை, வேலைக் காலியிடங்கள், நடப்பிலுள்ள பள்ளிப் பாடங்களுக்கான தேவை ஆகியவையே அம்மூன்று அம்சங்களாகும்.

ஒப்பந்த முறையில் இந்த 6,034 புதிய ஆசிரியர்களை வேலைக்கு எடுத்து, பள்ளிகளில் நிலவும் அவசரத் தேவையைப் பூர்த்திச் செய்ய உதவிய கல்வி சேவை ஆணையத்திற்கு (SPP) கல்வி அமைச்சு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, SPP-யுடன் KPM தொடர்ந்து அணுக்கமாக ஒத்துழைத்து வரும் என்றும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்திட மடானி அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் வெளிப்பாடே ஒப்பந்த முறையிலான இந்த ஆசிரியர் பணியமர்வு என்றும் KPM கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!