Latestமலேசியா

சாலை விபத்தில் சிக்கிய தேசிய எடை தூக்கும் வீரர் ஹஃபிசுடினின் வலது கை துண்டிப்பு

கோலாலம்பூர், நவம்பர்-20,சாலை விபத்தில் படுகாயமடைந்த தேசிய எடை தூக்கும் வீரர் முஹமட் ஹஃபிசுடின் ரோஸ்லினின் (Muhammad Hafizuddin Roslin) வலது கை, உயிரைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

22 வயதான அவர், கடந்த திங்கட்கிழமை இரவு அம்பாங்கிலிருந்து புக்கிட் ஜாலில் செல்லும் வழியில் SUKE நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார்.

இதில் அவரது வலது கை, தோள்பட்டை மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டன.

குறிப்பாக, வலது கையில் இரத்த நாளங்களும் நரம்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி முழங்கைக்கு மேல்பகுதியில் கை துண்டிக்கப்பட்டது.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சுமார் 7 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஹஃபிசுடினின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மலேசிய எடை தூக்கும் சம்மேளனத் தலைவர் டத்தோ Ayub Rahmat தெரிவித்தார்.

ஜூலையில் நடைபெற்ற 2026 Glasgow காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 88 கிலோ கிராம் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஹஃபிசுடின், தேசிய சாதனையையும் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!