Latestமலேசியா

நஜீப்புக்கு எதிராக சுகாதார அமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கு அடுத்தாண்டுக்கு ஒத்தி வைப்பு

டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் ( Dzulkefly Ahmad) தொடுத்த அவதூறு வழக்கின் விசாரணை அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கான விசாரணை இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில், தனது கட்சிக்காரரைப் பிரதி நிதிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக Dr சுல்கிஃப்ளியின் வழக்கறிஞர் டத்தோ SN நாயர், நீதித் துறை ஆணையரிடம் தெரிவித்தார்.

எனினும் விலகிக் கொள்வதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.

அவரின் விண்ணப்பத்துக்கு நஜீப் தரப்பும் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, நாயரின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதித் துறை ஆணையர், விசாரணைக்கான புதியத் தேதியாக அடுத்தாண்டு மார்ச் 5,6,7-ஆம் தேதிகளை நிர்ணயித்தார்.

2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் தனது facebook பக்கத்தில் நஜீப் போட்டிருந்த பதிவு தம்மை அவதூறு செய்யும் வகையில் இருந்ததாகக் கூறி, 2021-ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் Dr சுல்கிஃப்ளி அவ்வழக்கைத் தொடர்ந்தார்.

2019-ல் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தாம் சுகாதார அமைச்சராக இருந்த போது, Amanah Ikhtiar Malaysia வாரிய உறுப்பினராக தமது மகள் Nurul Iman நியமனம் பெற்றதில், தகுதி அடிப்படையில் இல்லாமல் சொந்தபந்தங்களுக்கு பதவி கொடுக்கும் nepotism அம்சம் இருந்ததாக நஜீப் தனது பதிவில் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனை சில பத்திரிகைகளும் screenshot எடுத்துச் செய்தியாக வெளியிட்டு விட்டன.

2021 நவம்பர் மாதம் வரையில் நஜீப்பின் அப்பதிவு அவரின் facebook பக்கத்தில் இருந்தது, தமது நற்பெயருக்கு களங்கம் என Dr சுல்கிஃப்ளி தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!