Latestமலேசியா

பூச்சோங் நாடாளுமன்றம் & ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றம் ஏற்பாட்டில் AI கருத்தரங்கு; பொதுமக்கள் கலந்து பயன்

பூச்சோங், ஜூன்-29-பொது மக்களின் டிஜிட்டல் சிந்தனை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில், பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி ஆகியவை இணைந்து நடத்திய பிரத்யேக AI கருத்தரங்கு செர்டாங் ராயா MBSJ 3K வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த இலவசக் கருத்தரங்கில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘ChatGPT’ மற்றும் ‘Deepseek’ போன்ற நவீன AI கருவிகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது குறித்து, சான்றளிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டுக் கழக (HRDC) பயிற்றுவிப்பாளரும் AI யுக்தி நிபுணருமான ஜெய் கண்ணன் மற்றும் வணிகச் செயல்முறை நிபுணர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், 17 வயதுக்கு மேற்பட்ட பல தரப்பினர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

பங்கேற்ற அனைவருக்கும் உணவு மற்றும் சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!