
ஜாசின், ஆகஸ்ட் 7 – மலாக்கா தாமான் மாஜுவிலுள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த 40 வயது பெண்ணைக் கொள்ளையர்கள், கத்தி காட்டி மிரட்டி அவரின் பணம் மற்றும் பிற பொருட்களை திருடியுள்ளனர்.
போலீஸ் தெரிவித்ததாவது, தலைக்கவசம் அணிந்த ஆடவன் ஒருவன் வாடிக்கையாளர் போல கடைக்குள் வந்து, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தும் கவுண்டருக்குச் சென்றுள்ளான்.
பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, கவுண்டரில் இருந்த பணத்தையும் பெண்ணின் கைப்பேசி, பணம் மற்றும் பிற பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளான்.
அதன்பின், கடைக்கு வெளியே காத்திருந்த தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளான்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் சுமார் 1,200 ரிங்கிட் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 60 ரிங்கிட் கடை பணம், 300 ரிங்கிட் ரொக்கம், ஒரு கைப்பேசி மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளடங்கும்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. போலீசார் வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



