Latestமலேசியா

11 நாட்களாக காணாமல்போன ஆடவர் ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்தார்

பாலிங், ஜான்-22-11 நாட்களாக காணமல்போன ஆடவரின் உடல் அழுகிய நிலையில் (Teloi Kanan FELDA) ரப்பர் தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பிரேதப் பரிசோதனை
அறிக்கையை எதிர்பார்த்து போலீசார் காத்திருக்கின்றனர்.

காலை மணி 11.50 அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து , விசாரணை நடத்துவதற்காக அப்பகுதிக்கு போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அனுப்பிவைக்கப்பட்டதாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan
பெரன்டோன் ரிச்சர்ட் ஜோ (Brandon Richard Joe) தெரிவித்தார்.

அந்த உடல் சிதைந்த நிலையில் இருந்ததால், அது நீண்ட நாட்களாக அப்பகுதியிலேயே இருந்திருக்கலாம் என அவர் கூறினார்.

சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகே காணாமல் போனவரின் அடையாள அட்டையும், அவரது கருப்பு நிற மொடெனாஸ் கிரிஸ் மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையில் அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இறந்து கிடந்த ஆடவர் ஜூன் 11 ஆம் தேதி காணாமல் போனதாக சிக் மாவட்டத்தில் அவரது மாமனாரால் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!