Latestமலேசியா

130-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன்பெற்ற ‘MPT4’ சிறப்பு வழிகாட்டிக் கருத்தரங்கு

சிரம்பான், ஆகஸ்ட்-9-ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி அமைச்சு (KPM) புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘Matriks Pembelajaran Tahun 4’ (MPT4) தேர்வு குறித்த சிறப்பு கருத்தரங்கு Arena Premier Hotel-ல் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

​ITC Edu Ventures Sdn Bhd ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 130 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

​ITC Edu Ventures Sdn Bhd இயக்குநர் சாலமன் சாந்தியாபூ, MPT4 என்பது கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்றிலும் புதிய தேர்வு வடிவமாகும் என்றார்.

காலை 8.00 மணி முதல் மாலை 4.15 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில், மலாய், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய 4 முக்கிய பாடங்களை உள்ளடக்கிய சிறப்பு அச்சிடப்பட்ட மாடல் (Exam Module) மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாதிரி வினாக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

 

 

 

 

​நிகழ்வை சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பின்னர் ​வணக்கம் மலேசியாவிடம் பேசிய முகுந்தன், மாணவர்களைத் தயார் செய்யும் இதுபோன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றார்.

மாணவர்களின் பங்கேற்பு மகிழ்ச்சியளிப்பதாக ITC Edu Ventures Sdn Bhd இயக்குநர் சாலமன் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கப் பேரவையின் தலைவர் சிவராம் மருதமுத்து, ITC Edu நிறுவனத்தின் இந்த முயற்சியைப் பாராட்டினார்.

கருத்தரங்கில் அடைந்த நன்மைகளைப் பற்றி மாணவர்கள் சிலரும் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

நெகிரி செம்பிலானைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக வரும் ஆகஸ்ட் 16 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிலாங்கூர், UPM பல்கலைக்கழகத்திலும், செப்டம்பர் 12 அன்று ஜோகூர் மாநிலத்திலும் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

​பிற மாநிலங்களில் நடைபெறும் MPT4 கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் பெற்றோர்களும் மாணவர்களும் 012-312 7274 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

மேலும், நிகழ்வு குறித்த தகவல்களை “ITC Edu” அதிகாரப்பூர்வ TikTok, Instagram மற்றும் Facebook பக்கங்கள் வழியேயும் தெரிந்துக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!