Latestமலேசியா

1,600 பழமரக் கன்றுகளுடன் 310,000 ரிங்கிட் மதிப்புடைய லோரி பறிமுதல்

கோத்தா பாரு, ஜூன்-17- தானா மேராவுக்கு அருகே உள்ள ( Lalang Pepuyu, ) சோதனைச் சாவடியில் பொது நடவடிக்கைப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பல்வேறு வகையான 1,600 பழமரக் கன்றுகளையும், 310,000 ரிங்கிட் மதிப்புள்ள லோரியையும் பறிமுதல் செய்தனர்.

பொது நடவடிக்கைப் படையின் 8வது பட்டாளத்தின் அதிகாரிகள் மதியம் மணி 12.30க்கு மேற்கொண்ட சோதனையில் , முறையே 62 மற்றும் 23 வயதுடைய லோரி ஓட்டுநரையும் , உதவியாளரையும் கைது செய்தனர்.

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு Hicom லோரியை நடவடிக்கைக் குழு தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 160,000 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பழ மரக்கன்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொது நடவடிக்கை படையின் தென் கிழக்கு பிரிவின் அதிகாரி மூத்த உதவி ஆணையர் அகமட் ரட்ஸி உசேய்ன் (Ahmad Radzi Hussain ) தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 28A-யின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதோடு , அனைத்து பழமரக் கன்றுகளும் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக Komtak Taman Bakti க்கு கொண்டு செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!