
ஷா ஆலாம், ஜூலை-17-மலேசியத் தொழிலாளர் வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயமான, 1941-ஆம் ஆண்டு கிள்ளான் இந்தியத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் 85-ஆம் ஆண்டு நினைவு பொதுக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
SICC, ஷா ஆலாம் தமிழர் சங்கம், கிள்ளான் சமூக நலச் சங்கம் மற்றும் மலேசிய இந்திய வரலாற்றுச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த வரலாற்றுப் பயிலரங்கம், வரும் ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை, ஷா ஆலாமில் உள்ள மிட்லண்ட்ஸ் மினி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்றையக் காலகட்டத்தில் நமது முன்னோர்களான தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் மனித கண்ணியத்திற்காகவும், நியாயமான ஊதியத்திற்காகவும் நடத்திய அந்த வீரமிக்க போராட்டத்தை நினைவுகூரவும், இன்றைய தொழிலாளர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமையவுள்ளது.
இக்கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ, வரலாற்று எழுத்தாளர் Dr எஸ். அருண், சீரியநாதன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
நமது நாட்டின் பகிரப்பட்ட வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும் பொது மக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக அமைப்புகள் என அனைவரும் திரளாக வந்து இந்நிகழ்வைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்குத் திரையில் தோன்றும் எண்களைத் (016-432 5065) தொடர்பு கொள்ளலாம்.



