Latestமலேசியா

2026ன் முதல் 5 மாதங்களில் 388 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு – லிம் ஹுய் யிங்

போர்ட்டிக்சன், ஜூன் 17 – 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் 388 பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying) தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் 477 ஆக இருந்த புகார்கள், 2025ஆம் ஆண்டில் 1,038 ஆக உயர்ந்துள்ளன. இந்த அதிகரிப்பு, பாதிக்கப்பட்டவர்கள் மௌனத்தை உடைத்து புகார் அளிக்க முன்வருவதையும் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதையும் காட்டுவதாக அவர் கூறினார்.

பெரும்பாலான சம்பவங்கள் பணியிடங்களில் நடைபெறுவதுடன், சிலவற்றில் குடும்பத் தொடர்புடையவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இதுவரை பாலியல் தொந்தரவுக்கு எதிரான தீர்ப்பு மன்றம் 100 புகார்களைப் பெற்றுள்ளதுடன், அவற்றில் 82 வழக்குகள் 60 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!