
கோலாலம்பூர், ஜூன்-27-நாட்டின் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ இவ்வாண்டு செயல்படுத்தப்படும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ‘2026 நல்லிணக்க கருத்தரங்கில்’ உரையாற்றிய அவர், சமூகத்தில் ஏற்படும் எந்தவொரு சிறிய கருத்து வேறுபாடுகளும் பெரிய நெருக்கடியாக மாறுவதற்கு முன்பு, அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து கண்காணிப்பதற்கான ஒரு ‘முன்னெச்சரிக்கை அமைப்பாக’ இந்த ஆய்வு அமையும் என்றார்.
குறிப்பாக, இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான 3R நிந்தனை விவகாரங்களைக் கையாள்வதில் இது கவனம் செலுத்தும்.
தேசிய ஒற்றுமை அச்சுறுத்தல்கள் தற்போது டிஜிட்டல் தளங்களுக்கு மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்குப் பாதுகாப்பு முறைகளும் அந்தந்தப் பகுதி மக்களின் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆரம்பக்கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் திட்டங்களை இன்னும் துல்லியமாக வடிவமைக்கவும் முடியும் எனக் குறிப்பிட்டார்.



