
கோலாலம்பூர், ஆகஸ்ட்-10 – மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக, ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், 24 மணி நேர இடைவிடா நேரலை நிகழ்ச்சியை மேற்கொள்ளவிருக்கிறது.
ஆகஸ்ட் 16- 17 -ஆம் தேதிகளில் AIMST YouTube வாயிலாக அந்நேரலை இடம் பெறும்.
அனைத்து கல்விப் புலங்கள், துறைகள் மற்றும் மாணவர்களின் திறமை இதில் வெளிப்படும்.
ஏய்ம்ஸ்ட் சிறப்புகள் பற்றிய பேச்சுகள், படைப்புகள், நேரலை செயல்முறைகளும் உண்டு.
அதோடு நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன.
இது வெறும் நேரலை அல்ல, புதிய சரித்திரத்திற்கான ஆயத்தம்…
குறைந்த கட்டணத்தில் நிறைவான கல்வி, மிகக் குறைந்த செலவில் பல்வேறு வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள், மிகச் சிறந்த கல்விச் சூழல், கல்வி உபகாரச் சம்பளம், பல்வேறு நிதியுதவிகள் என மாணவர்களின் நலன்களுக்கு முனுரிமைத் தருகிறது ஏய்ம்ஸ்ட்.
அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்கும் ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரின் கொள்கைக்கு ஏற்ப, கல்வி உபகாரச் சமம்பளங்கள் வழங்கப்படுகின்றன.
எனவே, இந்த வரலாற்றுப் பூர்வ நேரலையில் இணைந்து ஏய்ம்ஸ்ட் வழங்கும் சிறப்புகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை நழுவ விடாதீர்.