Latestமலேசியா

8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்

புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க இரு வழக்கறிஞர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.

​புத்ராஜெயா MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு கைதுச் செய்யப்பட்டனர்.

இவர்களை ஏப்ரல் 25-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​இருவரும் 2023 முதல் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இந்த நிதியைத் தங்கள் தனிப்பட்ட முதலீடுகளுக்காகப் பயன்படுத்தியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கு 2009 ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!