Latestமலேசியா

மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்

கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை இதுவரை பெற்தோடு இவற்றில் ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

எஞ்சிய இரு புகார்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் மேம்படுத்தும் நோக்கில், அனைத்து புகார்களும் தற்போது மலேசிய ஊடக மன்றத்தின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, தலைநகரில் நடைபெற்ற 21வது ஆசிய ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் பொது மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தியோ நீ சிங், மலேசிய ஊடகவியலாளர் மன்றம் அறநெறியுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்வதோடு, சுதந்திரமான செய்தியறிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதே இதன் பங்கு என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

அதே வேளையில் ஊடகங்களுக்கு எதிரான புகார்கள் தொடர்பான விசாரணை மற்றும் வழக்கு தொடரும் அதிகாரம் சட்ட அமலாக்க அமைப்புகளின் கீழ் இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!