
வாஷிங்டன், மே-3-Tesla மற்றும் SpaceX நிறுவன அதிபர் இலோன் மாஸ்க்குக்கு, செவ்வாய் கிரகக் குடியேற்றம் தொடர்பாக ஒரு புதிய வியக்கத்தக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு மில்லியன் மக்களைக் குடியேற்றும் இலக்கை இலோன் மாஸ்க் எட்டினால், அவருக்குப் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ‘நிறுவன போனஸ்’ (Company Bonus) வழங்கப்படவுள்ளதாம்.
என்றாலும் அதற்கு நிபந்தனையுண்டு.
அதாவது செவ்வாய் கிரகத்தில் ஒரு நிரந்தரமான மற்றும் சுயசார்பு கொண்ட நகரத்தை உருவாக்க வேண்டும்.
அது நடந்தால் அவருக்கு 200 மில்லியன் ‘Super-Voting’ பங்குகள் வழங்கப்படும்.
அதே சமயம், சுமார் 7.5 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவன வளர்ச்சியை எட்டினால் மட்டுமே இந்தச் சலுகைகள் மாஸ்க்குக்குச் சேரும் என Space X இயக்குநர் வாரியக் குழு தெரிவித்துள்ளது.
மாஸ்க்கின் சம்பளத் திட்டத்தில் உள்ள இந்த அம்சம், விண்வெளி ஆய்வு மற்றும் மனித குலத்தை மற்ற கோள்களுக்குக் கொண்டு செல்லும் அவரது தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒருபுறம் இது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது சாத்தியமா என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன.
மனித குலத்தை multi-planetary அதாவது பல-கோள் இனமாக மாற்றுவதற்கான மாஸ்க்கின் இந்த வினோதப் பந்தயம், தற்போது அனைத்துலக அளவில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இன்றைய தேதிக்கு ஒரு மனிதன் கூட நிரந்தரமாக வசிக்காத செவ்வாய் கிரத்திற்கு 2050-ஆம் ஆண்டு வாக்கில் 1 மில்லியன் மக்களை அனுப்புவது இலோன் மாஸ்க்கின் கனவுத் திட்டமாகும்.



