Latest

மெர்சிங்கில் கோர விபத்தில் சிக்கிய ஃபெராரி கார்: தீப்பற்றி எரிந்ததில் சிங்கப்பூர் தம்பதி உயிரிழப்பு

மெர்சிங், மே-10,

ஜோகூர் பாரு – மெர்சிங் சாலையில் நேற்று காலை வேகமாகச் சென்ற ஃபெராரி கார் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில், அதிலிருந்த சிங்கப்பூர் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காலை 9 மணி சம்பவத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளான சில விநாடிகளிலேயே தீப்பற்றி எரியத் தொடங்கியது.

காரின் உள்ளே சிக்கியிருந்த தம்பதியால் வெளியே வர முடியாமல் போனது.

பொது மக்கள் கொடுத்தத் தகவலின் பேரில் வந்த தீயணைப்பு மீட்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

எனினும், கார் கிட்டத்தட்ட முழுவதுமான எரிந்துப் போனதில், 34 வயது Yeo Tian Wen Leong மற்றும் 33 வயது Ng Puay Ying உடல் கருகி மாண்டனர்.

விபத்து காரணமாக அந்தச் சாலையில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!