
கிள்ளான், மே 26 – கிள்ளானில் கடந்த மே 13ஆம் தேதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று மாலை உயிரிழந்தார்.
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே, அவரது தந்தை, சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும், அதற்கான சம்மன் மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கடந்த மே 18ஆம் தேதி, 35 வயதான ஆடவன், மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டி உயிரிழந்த 27 வயது நபருக்கு கடுமையான காயம் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்தபோது சந்தேக ஆடவனின் இரத்தத்தில் 100 மில்லிலிட்டருக்கு 196 மில்லிகிராம் மது இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விபத்து கடந்த மே 13ஆம் தேதி அதிகாலை கிள்ளான் பெர்சியாரான் கோத்தா (Persiaran Kota)பகுதியில் இடம்பெற்றது.



