
புத்ராஜெயா, ஜூன்-4-நாட்டில் இன்று முதல் RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறைகின்றன.
ஜூன் 4 முதல் 10-ஆம் தேதி வரையிலான வாராந்திர எரிபொருள் விலை மாற்றங்களை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தானியங்கி விலை நிர்ணய முறையின் கீழ் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய விலை நிலவரப்படி RON97 லிட்டருக்கு 30 காசுகள் குறைந்து 4 ரிங்கிட் 35 காசுகளாகவும்,
மானியமில்லா RON95 லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து 3 ரிங்கிட் 72 காசுகளாகவும் விற்கப்படும்.
அதே சமயம், டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து 4 ரிங்கிட் 67 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், பொது மக்களுக்கான BUDI95 மானிய விலையிலான RON95 பெட்ரோல் தொடர்ந்து 1 ரிங்கிட் 99 காசுகளாகவே நீடிக்கும்.
அதே வேளையில், உலகச் சந்தையில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, பொது மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.



