Latestமலேசியாவிளையாட்டு

USM பல்கலைக்கழக இந்திய பண்பாட்டு கழகத்தின் ‘களம் 6.0’ கபடி போட்டி

பினாங்கு, ஜூன் 11 – கபடி விளையாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பல்கலைக்கழக மாணவர்களிடையே விளையாட்டு ஒற்றுமை, போட்டித் திறன் மற்றும் கலாச்சார பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ‘களம் 6.0’ கபடி போட்டி மே 16-தேதியன்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) சிறப்பாக நடைபெற்றது.

நாட்டின் 9 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 7 அணிகளும் களமிறங்கின.

ஆண்கள் பிரிவில் தொழில்நுட்ப மலேசியா பல்கலைக்கழகம் (UTM) சாம்பியன் பட்டத்தை வென்று RM1,400 ரொக்கப் பரிசும் கோப்பையும் கைப்பற்றியது. துன் ஹுசைன் ஒன் பல்கலைக்கழகம் (UTHM) இரண்டாம் இடத்தையும், புத்ரா பல்கலைக்கழகம் (UPM) மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பெண்கள் பிரிவில் வடக்கு மலேசியா பல்கலைக்கழகத்தின் UUM B அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொழில்நுட்ப மலேசியா பல்கலைக்கழகம் (UTM) இரண்டாம் இடத்தையும், UUM A அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.

‘களம் 6.0’ நிகழ்வின் திட்ட இயக்குநராக தவணேஸ்வரன் காலியப்பன் செயல்பட்டார்.

மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பு மற்றும் கபடி விளையாட்டின் மீதான ஆர்வம் இன்னும் வலுவாக தொடர்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த ‘களம் 6.0’.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!