
வாஷிங்டன், ஜூன்-13-உலக மகா கோடீஸ்வரரான இலோன் மாஸ்க், உலக வரலாற்றிலேயே அதிகாரப்பூர்வமாக முதல் ‘ட்ரில்லியனர்’ (Trillionaire) என்ற அந்தஸ்தைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
அவரது விண்வெளி நிறுவனமான SpaceX பங்குச் சந்தையில் கால்பதித்த முதல் நாளிலேயே அதன் பங்குகள் 11 விழுக்காடு வரை உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
தொடக்க விலையாக 135 டாலராக இருந்த SpaceX பங்குகள், வர்த்தகத்தின் போது 172 டாலர் வரை உயர்ந்தன.
இதன் மூலம் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 2.18 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
இலோன் மாஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு SpaceX மற்றும் அவரது மின்சார வாகன நிறுவனமான Tesla ஆகியவற்றின் பங்குகளை உள்ளடக்கியதாகும்.
விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மற்றும் தரவு மையங்களை அமைப்பதற்கும், செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் தேவையான பில்லியன் கணக்கான டாலர் நிதியைத் திரட்டுவதற்காகவே SpaceX பொது வர்த்தகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக மாஸ்க் தெரிவித்துள்ளார்.



