Latestவிளையாட்டு

உலகக் கோப்பை ஒளிபரப்பு கோளாறு: மன்னிப்பு கோரிய RTM

கோலாலம்பூர், ஜூன் 17: இன்று அதிகாலை நடைபெற்ற பிரான்ஸ்–செனகல் (France-Senegal ) FIFA உலகக் கோப்பை போட்டியின் முதல் பாதியின்போது RTMKlik தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்காக RTM மன்னிப்பு கோரியுள்ளது.

எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சினையால் சில பயனர்கள் போட்டியை சீராகப் பார்க்க முடியவில்லை என RTM தெரிவித்தது. சேவையை மீட்டமைக்க தொழில்நுட்பக் குழு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியது.

காற்பந்து ரசிகர்களின் ஏமாற்றத்தை புரிந்துகொள்வதாக தெரிவித்த RTM, 2026 FIFA உலகக் கோப்பையின் 104 போட்டிகளும் தரமான முறையில் ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய தேவையான மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தது.

முன்னதாக, போட்டியை பார்க்க முயன்ற பல ரசிகர்களுக்கு “Video Unavailable” என்ற அறிவிப்பு தோன்றியதால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!