Latestமலேசியா

மதுபோதையில் காரோட்டிய குற்றத்தை வேலையில்லாத நபர் ஒப்புதல்

பத்து பஹாட், ஜூன் 18 – மதுபோதையுடன் கார் ஓட்டிய குற்றத்தை வேலையில்லாத ஆடவன் ஒருவன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான்.

மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் 1987 ஆம் ஆண்டு ( திருத்தப்பட்ட 2,020 ஆண்டு சட்டம் ) சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 26 வயது இளைஞன் ஒப்புக்கொண்டான்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம்தேதி விடியற்காலை மணி 3.24க்கு பத்து பஹாட் , பெர்சியாரான் புளோரா உத்தாமாவில் அந்நபர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30,000 ரிங்கிட்வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுவரை சிறை மற்றும் வாகன ஓட்டும் லைசென்ஸ் தகுதி ரத்துச் செய்யப்படும் சாத்தியத்தையும் அந்த இளைஞன் எதிர்நோக்கியுள்ளான்.

அந்த ஆடவனுக்கு 7,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!