
புத்ராஜெயா, ஜூன்-24-நாடு தழுவிய அளவில், கடப்பிதழ் சேவை வழங்கும் 71 அலுவலகக் கிளைகளின் முகப்பிடங்கள் வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக தற்காலிகமாக மூடப்படும் என, மலேசியக் குடிநுழைவு இலாகா அறிவித்துள்ளது.
முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த முதற்கட்ட மூடல் நடவடிக்கை, ஜூன் 30-ஆம் தேதி வரை நீடிக்கும்.
இந்தக் காலக்கட்டத்தில், சம்பந்தப்பட்ட கிளைகளில் நேரடியாக முகப்பிடங்கள் வழி விண்ணப்பிப்பது, MyOnline Pasport இணையச் சேவைகளைப் பயன்படுத்துவது மற்றும் கடப்பிதழ் அச்சிடுவது போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
புத்ராஜெயா தலைமையகம், கோலாலம்பூர் ஜாலான் டூத்தா, மலாக்கா, கிளானா ஜெயா, KLIA மற்றும் புடுராயா, சிலாங்கூர், ஜோகூர் பாரு, பாசீர் கூடாங் ஆகிய இடங்களின் UTC கிளைகள் இந்த முதற்கட்ட மூடுதலில் உள்ளடங்குகின்றன.
எனவே, பொது மக்கள் தங்களின் கடப்பிதழ் விவகாரங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



